கபடி ஆடலாமா?



சரோஜாதேவி பதில்கள்

* பிறந்தநாளுக்கு புத்தாடை அணிவது ஏன்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

இதென்ன கேள்வி. பிறந்தபோது இருந்தமாதிரியே இருக்க வேண்டும் என்கிறீர்களா?

* ஷகிலா, சுயசரிதை எழுதியிருக்கிறாராமே?
- அ.காஜாமைதீன், பழனி.

‘ஷகிலா : ஓர் இதயத்தின் உண்மைக்கதை’ என்கிற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்நூலில், “எந்த இயக்குநரும், எந்தத் தயாரிப்பாளரும் கூடப்படுக்க என்னிடம் வேண்டுகோள் விடுத்ததில்லை. எந்தவிதமான அட்ஜஸ்மென்டுக்கும் நான் உடன்பட நேர்ந்ததில்லை” என்று குறிப்பிடுகிறார் ஷகிலா. அவர் குறித்த நம் பார்வையை முற்றிலுமாக மாற்றக்கூடிய ஆச்சரியமான சுயசரிதை.

* கபடி ஆடலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
நான் ரெடி. நீங்க தாக்குப் பிடிப்பீங்களா?

* முதலிரவென்றால் பூவிலிருந்து வண்டு தேன் குடிப்பதைப் போலவும், பாலியல் வன்புணர்வு என்றால் புலி மானை வேட்டை ஆடுவது போலவும் சிம்பாலிக்காக சினிமாவில் காட்டும் ஐடியா யாருடையது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

ஒரே செயலை ஒன்றுக்கு மேற்பட்ட விதமான கோணத்தில் பார்க்கலாம் என்று பாடம் நடத்தியவர் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவா. ஆனால், நேரடியாக செக்ஸை காட்ட முடியாத நிர்ப்பந்தத்தில் இருக்கும் இந்திய சினிமா, அதற்கு மாற்றாக இதுபோன்று உருவாக்கிய குறியீடுகள் உலகச்சினிமா இயக்குநர்களே நம்மிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடங்கள்.

* ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா என்னை காதலிப்பாரா?
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி
ரேகாவின் மகளே ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வயதில் இருக்கும் காலத்தில் இந்தக் கேள்வி ரொம்ப அவசியமா தாத்தா?