கரீனாவின் கச்சிதத்துக்கு காரணம்?



ஐஸ்வர்யா ராயின் ‘சரப்ஜித்’, எதிர்பார்த்த வசூலை ஈட்டாததால் படக்குழு அப்செட் ஆகியுள்ளது.‘சுல்தான்’ படத்தின் புரமோஷன்களில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் அனுஷ்கா சர்மா விரக்தி அடைந்துள்ளார்.

அமீர்கான் தனது பட நிறுவனத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். அதில் ஒன்றை மீண்டும் அவரது மனைவி கிரண்ராவ் இயக்குகிறார்.

கேன்ஸ் படவிழாவுக்கு இப்போதெல்லாம் தன்னை அழைப்பதில்லை என வருத்தப்பட்டுள்ளார் மல்லிகா ஷெராவத்.பிபாஷா பாசு தனது கல்யாணத்துக்கு மாஜி காதலன் ஜான் ஆப்ரஹாமை அழைத்தும் அவர் செல்லவில்லையாம்.பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்ப்பதாலேயே இப்போதும் கச்சிதமாக இருக்கிறேன் என பூரிக்கிறார் கரீனா கபூர்.

வீரப்பன் படம் மூலம் பாலிவுட்டில் ரீஎன்ட்ரி ஆகிவிடலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம் ராம்கோபால் வர்மா.பெண் டைரக்டர் சோயா அக்தர் இயக்கும் படத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இதில் அவரது காதலி தீபிகா படுகோனேவை நடிக்க கேட்டபோது, கால்ஷீட் இல்லை என கைவிரித்து விட்டார்.

பாலிவுட்டில் தொடர்ந்து மிகத்தாராளமான கவர்ச்சி வேடங்களிலேயே ராதிகா ஆப்தே நடிப்பது அவரது ஃபேமிலிக்கு பிடிக்கவில்லையாம்.ஹ்ரித்திக் ரோஷனுக்கு மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் ஆபரேஷன் நடைபெற உள்ளது.

- ஜியா