வீடு வாங்கலையோ வீடு!



இப்போதுள்ள நடிகைகள் அந்தக்கால நடிகைகள் மாதிரி இல்லை. ரொம்ப உஷார். சம்பாதிக்கும் பணத்தை அப்படியே சொத்தாக முதலீடு செய்து எதிர்கால வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்கிறார்கள்.

பாலிவுட் படங்களில் நடித்து, அங்கே கணிசமாக சம்பாதித்து மும்பையில் வீடு வாங்குவதுதான் இப்போதைய இளம் நடிகைகளிடையே பெருகிவரும் கலாச்சாரமாக இருக்கிறது. அசின், ராய்லட்சுமி, ஸ்ருதிஹாசன், சஞ்சனாசிங், டாப்ஸி, எமி ஜாக்சன் போன்றோர் ஏற்கனவே அங்கே வீடு வாங்கி விட்டார்கள். இந்த விஷயம் கேள்விப்பட்ட மற்ற நடிகைகளும் மும்பையில் கிரகப்பிரவேசம் செய்ய ஆசைப்படுகிறார்கள்.

- தேவ்