ஹீரோ ஆகிறார் ‘தாரை தப்பட்டை’ வில்லன்?



‘தாரை தப்பட்டை’யில் வில்லனாக அறிமுகமானவர் தயாரிப்பாளரான ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ். இவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கோடம்பாக்கத்தில் திடீர் வதந்தி. படத்தை கேமிராமேன் செழியன் இயக்குகிறார். வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார் என்று வதந்திக்கு இருபுறமும் இறக்கையும் கட்டிவிட்டார்கள். செழியனிடம் கேட்டால் சிரிக்கிறார். “டைரக்‌ஷன் பத்தி இன்னும் முடிவே பண்ணலை. சும்மா பேசிக்கிட்டிருந்ததை யாரோ தகவலா பரப்பி விட்டுட்டாங்க. எல்லாம் ஃபைனலைஸ் ஆனதும் நிச்சயமா உங்களையெல்லாம் கூப்பிட்டு சொல்றேன்” என்கிறார்.

- தேவா