நேரம் வரட்டும்!



சானியா எதிர்பார்ப்பு!!

சானியா மிர்ஸாவுக்கு மட்டுமில்லை. நம்ம சானியா ஷேக்குக்கும் ரிஷிமூலம் ஹைதராபாத்தான். சினிமாவுக்காக சானியாதாரா. ‘ஜிகினா’வில் அறிமுகமான ஜிகிடி. ‘வாராயோ வெண்ணிலாவே’யில் சின்ன பாத்திரமாக இருந்தாலும் கிண்ணென்று முத்திரை பதித்தவர். சுசீந்திரனின் ‘ஜீவா’வில் செகண்ட் ஹீரோயினாக மின்னியவர்.

‘சந்திரமுகி’ மாதிரி பேய்ப்படங்கள்தான் சானியாவின் ஃபேவரைட். ஜோதிகாதான் இவருக்குப் பிடித்த நாயகி. ஜோதிகாவைப் பிடிக்குமென்பதால் ஆட்டோமேட்டிக்காக சூர்யாவையும் பிடிக்குமாம். சிக்கென்று இருக்கும் சானியாவுக்கு சிக்கன் என்றால் உயிர். சாப்பிடுவது மட்டுமல்ல, சமைப்பதிலும் கில்லாடியாம்.

அழகும், திறமையும் அளவுக்கதிமாக இருந்தும் சானியா ஏன் இன்னும் முன்னணிக்கு வரமுடியவில்லை?

“அது  அதுக்கு ஒரு நேரம் வரணும் சார். வந்துட்டா யார் நினைச்சாலும் தடுக்க  முடியாது. சரியான வாய்ப்புக்கு கொக்கு மாதிரி காத்துக்கிட்டிருக்கேன்.  வந்ததும் பிடிச்சி சரசரன்னு மேலே வந்துருவேன் பாருங்க” என்று நம்பிக்கையோடு  பேசுகிறார்.

- யுவா