இன்னொரு டாக்டர் ஹீரோ ஆகிறார்!



‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசனுக்கு டஃப் கொடுக்கிறார் இன்னொரு டாக்டர். பெயர் பரத் விஜய். ஆனால் அவர் போல இவர் காமெடிபீஸ் நடிகர் அல்ல. ஸ்மார்ட் ஹீரோ. படத்தின் பெயர் ‘ஆறாம் அறிவு’.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையால் மனைவி பாதிக்கப்படுகிறார். நிம்மதி இழந்து தவிக்கும் கணவன், மனைவியை அப்பிரச்சினையில் இருந்து எப்படி மீட்கிறார் என்பதை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.

‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார் கோஷ்டியில் கரகம் ஆடிய சஹானா நாயகியாக நடிக்கிறார். ‘‘என்னுடைய குடும்பத்தில் நிறைய பேர் டாக்டர்ஸ். அந்த இன்ஸ்பிரேஷனில்தான் டாக்டருக்கு படித்தேன். அதே சமயம் மாடலிங் மீதும் ஆர்வம் இருந்தது. தொடர்ந்து பிலிம் டைரக்‌ஷன் படிச்சேன். சொந்தக் காலில் நிற்கும் முயற்சியாக நானே இந்தப் படத்தை நடித்து இயக்குவதுடன் தயாரித்திருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பரத் விஜய்.

- ரா