நான் செம அயிட்டம்! கிளுகிளுக்கிறார் நமீதா!!



சூரத்திலிருந்து துணிகளைத்தான் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். முதன்முதலாக அங்கிருந்து நாம் டவுன்லோடு செய்த அழகுப் பொக்கிஷம் நமீதா. சங்கத்தமிழ், இவரது கொஞ்சு தமிழில் பெரும் பரிணாமம்.

அத்தனை அழகு. கிளாமர் குயீனாக அவரை தென்னிந்தியாவே கொண்டாடினாலும், “நான் பொம்மையில்லை” என்று முகம் சிவந்து ஏற்க மறுக்கிறார். “எனக்கு நல்லா நடிக்கத் தெரியும். நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்று நம்பிக்கையோடு பேசுகிறார்.

“கலைச்சேவை தொடங்கி பதிமூணு வருஷமாயிடிச்சி போலிருக்கே?”“ஆமாம். இத்தனை வருஷத்துலே தமிழ், தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ், குஜராத்தின்னு நிறைய படங்களில் பண்ணிட்டேன். தமிழில்தான் பெரிய இடைவெளி. அதுக்கு நானேதான் காரணம். இங்கே என்னை எல்லாரும் கிளாமர் குயீனாதான் பார்க்குறாங்க.

எனக்கே கவர்ச்சி காட்டி அலுத்திடிச்சி. என்னோட திறமைக்கு ஸ்கோப் இருக்குற கதையை சொல்லுறவங்களுக்கு மட்டும் ஒப்புக்கறேன். கடைசியா ‘இளைஞன்’ பண்ணி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆயிடிச்சி. தமிழில் பண்ணலையே தவிர மத்த மொழி படங்களில் பிஸியாதான் இருக்கேன்.”

“திடீர்னு ‘பொட்டு’ பட ஸ்டில்களில் மிரட்டு மிரட்டுன்னு மிரட்டுறீங்களே?”“பொம்பளை அகோரி கேரக்டர். ஹீரோ பரத்துக்கு நான்தான் வில்லி. இயக்குநர் வடிவுடையான் இந்த கேரக்டரை விவரிக்கிறப்போ எனக்கு சரியா பிடிபடலை. ‘நான் கடவுள்’ படத்துலே ஆர்யா நடிச்ச கேரக்டருன்னு சொன்னாரு. அதை மறுபடியும் பார்த்தப்போ அசந்துட்டேன். நடிச்சா இப்படியொரு கேரக்டர்தான் பண்ணணும்னு வைராக்கியம் வந்துடிச்சி. இந்தப் படம் நிச்சயமா என்னோட கேரியரில் மைல் ஸ்டோன்.”

“இந்தப் படத்துக்காக சுருட்டு பிடிக்கறீங்களாமே?”“போட்டோ செஷன் பண்ணப்ப ஸ்டைலா சுருட்டு இழுக்கணும்னு டைரக்டர் சொன்னாரு. எனக்கு புகைன்னாலே பகைன்னு தயங்கினேன். கேரக்டருக்காக பண்ணிதான் ஆகணும்னு டைரக்டர் கன்வின்ஸ் பண்ணாரு. இதெல்லாம் என்ன பெரிய விஷயம். செக்கச்சேவேல்னு தாமரை மாதிரி இருக்குற நான் இந்தப் படத்துக்காக என் கலரையே கருப்பா மாத்திக்கப்போறேன்.”

“ரஜினியை ‘சிவாஜி’ படத்துலே கிராபிக்ஸில் சிகப்பா காட்டினாங்களே, அது மாதிரியா?”“கிராபிக்ஸெல்லாம் இல்லை. மேக்கப்தான். நான் கருப்பா மாறணும்னா ஏழு தடவை மேக்கப் போடணும். ரெண்டு மணி நேரம் ஆகும். அப்படியும் கலர் பளிச்சிட்டுடும். துபாயிலே ஒரு லேட்டஸ்ட் ட்ரீட்மென்ட் இருக்கு. அதை எடுத்துக்கிட்டா மூணு மாசத்துக்கு கலர் மாறிடும். அதைதான் செய்யப் போறேன். எனக்குத் தெரிஞ்சு கேரக்டருக்காக நம் நாட்டிலேயே யாரும் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்ததில்லை. துணிஞ்சு எடுக்கப் போறேன்.”

“கேட்கறதுக்கே சுவாரஸ்யமா இருக்கு. அதிருக்கட்டும், இனிமே உங்க கிளாமரை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு அல்வாதானா?”
“இதுவரைக்கும் பிரியாணி போட்டேன். இப்போ சாம்பார் சாதம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்காக இனிமே பிரியாணியே கிடையாதுன்னு நெனைச்சுக்கக்கூடாது. வெரைட்டியா சாப்பிட்டாதான் சாப்பாடு மேலே சலிப்பு வராது.”

“ஆஹா. நெஞ்சுலே பாலை வார்த்தீங்க. அதிருக்கட்டும், ஏன் அயிட்டம் சாங் பண்ணுறதில்லை? எல்லா பெரிய ஹீரோயினுமே செய்யுறாங்களே?”
“இதுவரைக்கும் இருபத்தஞ்சி படத்துக்கும் மேலே கேட்டுட்டாங்க. பண்ண மாட்டேன்னு பிடிவாதமா இருக்கேன். சம்பளம் நிறைய தர்றோம்னு சொன்னாங்க. பணத்தைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்குன்னு மறுத்துட்டேன். இதுவரை ஒரே ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டதில்லை. இனியும் போடமாட்டேன். கடைசிவரை ஹீரோயினாதான் நடிப்பேன்.”“திடீர்னு ஸ்லிம் ஆயிட்டீங்க?

“அகோரி கேரக்டருக்காகத்தான். தொண்ணூத்தி மூணு கிலோ இருந்தேன். எக்சர்சைஸ், டயட்டுன்னு கண்ட்ரோலா இருந்து எழுபது கிலோ ஆயிட்டேன். இன்னும் அஞ்சு கிலோ குறைக்கணும்னு ப்ளான்.”“உங்க வீட்டுலே பேய் நடமாட்டம் இருக்குறதா பேசிக்கறாங்களே?”
“நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசிக்கிறேன். கொஞ்சநாள் முன்பு திடீர்னு ஏதோ அமானுஷ்ய சக்தியோட நடமாட்டத்தை உணர்ந்தேன்.

போனவருஷம் சிங்கப்பூர் போயிருந்தப்போ ஓட்டல் ரூமுலேயும் வேற ஏதோ மனித ஆற்றலைத் தாண்டிய சக்தியின் நடமாட்டத்தை ஃபீல் பண்ணேன். இதையெல்லாம் வெளியே சொன்னா ஆளாளுக்கு கிண்டல் அடிப்பாங்களோன்னு பயம். இந்த உலகத்துல நம்மை மீறி, நம்ம சக்தியை மீறி பல விஷயங்கள் நடந்துக்கிட்டிருக்கு. நல்ல சக்திகளும் இருக்கு. கெட்ட சக்திகளும் இருக்கு. இதுதான் உண்மை.”

“அப்போன்னா பேய்க்கு பயப்படுறீங்க?”

“எனக்கு எதன் மேலும் பயம் கிடையாது. நேரில் பேய் வந்தா ரசிக்க ஆரம்பிச்சிடுவேன்.”“நமீதான்னாலே தமிழ்நாட்டுலே எல்லா மச்சான்களும் ஜில்லாயிடுறாங்க. உங்க உடம்புலே உங்களுக்கு புடிச்ச இடம் எது?”“நான் செம அயிட்டமுன்னு எனக்கே தெரியும்...”  (நமீதா சொன்ன இடம் ‘பீப்’ செய்யப்படுகிறது -ஆசிரியர்).“அய்யோ இப்படியெல்லாம் பேசக்கூடாது. தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி. ‘அயிட்டம்’னா இங்கே
மீனிங்கே வேற...”

“அப்படியா? அப்படின்னா நான் சூப்பர் ஃபிகர். என் உடம்புலே எல்லா பார்ட்ஸுமே எனக்குப் பிடிக்கும். குறிப்பா அழகா சிரிக்கிற என்னுடைய உதடுகள்.”“சரி. மச்சான்கள் இன்னும் லவ் லெட்டர் போடுறாங்களா?”“ட்விட்டர்லேயும், இன்ஸ்டாகிராம்லேயும் பிஸியா இருக்கேன். அங்கே வந்து லவ்ஸ் உடுறாங்க”“அரசியலுக்கு வரப்போறதா சொல்றாங்களே?”

“வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழவைக்கும்னு நம்பறேன். இங்கே நிறைய கட்சிகள் இருக்கு. எந்த கட்சியில் சேர்ந்து சேவை செய்யுறதுன்னு இன்னும் டிசைட் பண்ணலை. ஆனா, கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்.”
“கல்யாணம் எப்போ?”

“மச்சி, இப்பவே லைஃப் நல்லாதான் போயிக்கிட்டிருக்கு. எனக்கு எதுக்கு கல்யாண வெறி? சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கு. அதுக்கு கல்யாணம் முட்டுக்கட்டையா இருக்கப்படாது.”- சொல்லிவிட்டு குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் பெற்ற அக்மார்க் நமீதா பிராண்ட் குலுக்கல். ஜொள்ளிவிட்டு விடைபெற்றோம்.

- தேவராஜ்