கிளுகிளு படத்துக்கு சென்சாரில் வெட்டுக்குத்து!



அமீர்கானின் ‘தங்கால்’, இந்த ஆண்டு இறுதியில் வெளிவருவதாக இருந்தது. எடுத்த காட்சிகள் திருப்தி தராததால் மீண்டும் அதே காட்சிகளை படப்பிடிப்பு நடத்த அமீர்கான் முடிவெடுத்திருக்கிறார். இதனால் அடுத்த ஆண்டு கடைசியில்தான் ரிலீசாகுமாம்.

பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் வித்யா பாலன், மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷாருக்கானின் பிறந்த நாளுக்கு அவரது போட்டியாளரான சல்மான்கான், நேரில் சென்று வாழ்த்து சொன்னார். இப்போது மீண்டும் இருவரும் பழையபடி தோஸ்த்தாகி விட்டனர்.

கிளுகிளு காட்சிகளுக்காகவே ‘ஹேட் ஸ்டோரி’யின் இரண்டு பாகங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. இப்போது டிசம்பரில் வெளியாகும் மூன்றாவது பாகத்தில் நடிகை ஜரின்கான் ‘தெறமை’ காட்டிய பல காட்சிகளுக்கு சென்சார் கண்டிப்பாக கத்திரி போடும் என்கிறார்கள்.



ஒரே நேரத்தில் ‘தில்வாலே’, ‘ஃபேன்’, ‘ரயீஸ்’ படங்களில் நடித்து வரும் ஷாருக்கான், அதன் பின்னர் ஆறு மாதம் படம் எதுவும் செய்யாமல் குடும்பத்தோடு நேரத்தைக் கழிக்க திட்டமிட்டிருக்கிறார்.

டிசம்பர் 8ம் தேதி 80 வயதைத் தொடுகிறார் தர்மேந்திரா. அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பாலிவுட் சினிமாஉலகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

‘பாஜிராவ் மஸ்தானி’ படத்துக்காக வாள் சண்டை கற்றபோது பதிமூன்று முறை கை, கால்களில் காயம்பட்டதாக சொல்கிறார் தீபிகா படுகோன்.

‘பிரேம் ரதன் தன் பாயோ’ ஷூட்டிங்கில் சல்மான்கானை சைட் அடித்ததாக சொல்லியிருக்கிறார் சோனம் கபூர். இதற்கு சல்மானிடமிருந்து நோரியாக்ஷன்.

- ஜியா