த்ரில் வேணுமா சொல்லு?



உனக்கு என்ன வேணும் சொல்லு விமர்சனம்

சிங்கப்பூரில் கணவனோடு குடும்பம் நடத்துகிறார் ஜாக்குலின் பிரகாஷ். ஆதர்ச தம்பதியான அவர்களுக்கு ஒரே ஒரு செல்ல மகன். அந்த அன்புச் செல்லத்துக்கு வினோத நோய். டாக்டர்கள், இந்தியாவில் ட்ரீட்மென்ட் எடுக்க பரிந்துரை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வரும் ஜாக்குலின் குடும்பத்தை ஒரு குழந்தையின் ஆவி வறுத்து எடுக்கிறது. ஜாக்குலினுக்கும் ஆவிக்கும் என்ன தொடர்பு, ஆவியின் கோரப் பிடியிலிருந்து ஜாக்குலின் அண்ட் கோ தப்பித்தார்களா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.



மேக்கிங் அட்டகாசம். இருள், வெளிச்சம் என மாறிமாறி விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனீஷ்மூர்த்தி. சிவசரவணனின் இசை கதைக்கு தேவையான த்ரில்லிங்கை கொடுத்திருக்கிறது. லிவிங் டு கெதர் பாணியில் வாழ்பவர்களுக்கு குழந்தை பிறந்தால் என்னாகும் என்கிற கலாச்சாரச் சீர்கேட்டினை வலுவாகச் சொல்லியிருக்கும் இயக்குனரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் தன்னுடைய பங்கு அதிகம் என்பதால் அதை சரியாக உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் ஜாக்குலின் பிரகாஷ். காதலனாக வரும் தீபக் பரமேஷ், கணவனாக வரும் குணாளன், சாமியாராக வரும் மைம் கோபி என அனைவருக்கும் டைலர் மேட் ரோல் என்பதால் கச்சிதம். த்ரில் வேணும் என்று சொல்லும் ரசிகனுக்கு இந்தப் படம் செம தீனி.