டோலிவுட் கோங்குரா





டோலிவுட் க்யூட் டால் ரகுல் ப்ரீத்சிங் ஓய்வு நேரம் முழுவதையும் உடற்பயிற்சி மேற்கொள்வதில் செலவழிக்கிறார். மட்டுமின்றி பர்சனலாக தற்காப்புக்கலை பயிற்சியாளர் ஒருவரை முழுநேரப் பணிக்கு அமர்த்தி சண்டை போடவும் கற்றுக் கொள்கிறார். படப்பிடிப்பில் யாரேனும் ரகுலிடம் கொஞ்சம் எடக்கு மடக்காக நடந்து கொண்டால் புரூஸ்லீ பாணியில் வூடு கட்டி, ஆ ஊ என்று சவுண்டு கொடுத்து சீனபாணி வணக்கம் வைத்து அலற வைக்கிறாராம். பஞ்ச் டயலாக் அடித்தே வில்லன்களை பந்தாட வைக்கும் டோலிவுட்டே   ரகுலைக் கண்டு அரண்டுப் போயிருக்கிறது.