சார்மிக்கு தமிழ் அலர்ஜி!



தமிழ் மீடியாவிடம் பேசுவது என்றாலே சார்மிக்கு அச்சம் தான். ‘ஆஹா எத்தனை அழகு?’ படத்தில் நடித்தபோது, இயக்குனர் கண்மணியுடன் இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளிவர காரணமாக இருந்தார். அப்போதே அதை மறுத்தார். ஆயினும், தமிழில் ராசியில்லாத நாயகி என்று ஓரம் கட்டப்பட்டார். தெலுங்குக்கு போனார். சக்கைப்போடு போட்டார். சொந்தப்படம் தயாரிக்குமளவுக்கு கோடி கோடியாக சம்பாதித்தார். ஆனால், அந்தப் படத்தால் பயங்கர நஷ்டம்.



தமிழில் மீண்டும் ‘லாட’ படம் மூலம் ரீ-என்ட்ரிக்கு முயற்சித்தார். சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை. டோலிவுட்டிலும் கிசுகிசு ராணியாக உருவெடுத்தார். அனைத்தும் பொய் என்று வழக்கம்போல மறுத்தார். மீண்டும் தமிழில் ‘10 எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் ஒரு பாடலுக்கு இடுப்பு காட்டுகிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இந்தப் படத்தை இயக்குகிறார். இமான் இசையில், மதன் கார்க்கி எழுதியிருக்கும் ‘கானா கானா தெலுங்கானா’ பாடல் காட்சியில் சார்மியோடு விக்ரம், சமந்தா இணைந்து ஆடியிருக்கிறார்கள். படம் வெளியாகும்போது தியேட்டரில் ஏழு நிமிடத்துக்கு நீளும் இப்பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடும் என்கிறார்கள்.