மொத்தமாக முத்தமாக



பூர்ணா லேசுப்பட்ட பொண்ணு இல்லை. கொடூரமான வில்லனையே ‘தகராறு’ படத்தில் எட்டி உதைத்தவர் ஆயிற்றே! லேசான ஆண்மைத்தனம் கலந்த அதட்டல் குரலுக்கு சொந்தக்காரர். அதனால்தானோ என்னவோ மிஷ்கின் எழுதி, தயாரிக்கும் ‘சவரக்கத்தி’க்கு ஹீரோயின் ஆக்கியிருக்கிறார். ஆறு ஹீரோயின்கள் நிராகரித்துவிட்ட அபாயமான கதை இது.
 
மிஷ்கின், போனில் அவுட்லைன் சொன்னதுமே, “அடடே... இந்த மாதிரி கேரக்டருக்குத்தான் இத்தனைநாளா காத்திருந்தேன்” என்று உடனே ஓக்கே சொல்லியிருக்கிறார். பூர்ணாவுக்கு கணவராக இயக்குனர் ராம் நடிக்கிறார்.

படத்தின் தொடக்கவிழாவுக்கு வந்த இயக்குனர் பாலாவை, மிஷ்கின் கூச்சத்தில் நெளியவைத்துவிட்டார். அவரைக் கண்டதுமே கட்டிப்பிடித்து மாறி மாறி ‘இச்சு’ கொடுத்து கன்னத்தை ஈரமாக்கிவிட்டாராம். ‘பிசாசு’ படம் இயக்க தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் என்பதற்காக நன்றிக்கடனை மொத்தமாக முத்தமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

- தேவா