கஜோலுக்கு காயம்!





*‘பாஸ்கர் தி ராஸ்கல்’ இந்தி ரீமேக்கில் நடிக்க அக்ஷய்குமாரிடம் பேசி வருகிறார் டைரக்டர் சித்திக்.
*அக்டோபரில் வெளியாகும் ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்துக்குப் போட்டியாக சல்மான் கானின் ‘சுல்தான்’ வெளியாகிறது.
*டிரம்ஸ் கற்க விரும்பிய சோனாக்ஷி சின்ஹா, அதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இது அவரது சிறு வயது ஆசையாம்.
*‘தில்வாலே’ பட ஷூட்டிங்கில் கார் சேஸிங் காட்சியில் காயம் அடைந்துள்ளார் கஜோல்.
*மாதுரி தீட்சித்துக்கு சினிமா வாய்ப்பைவிட டிவி வாய்ப்புகள் அதிகம் வருவதால் கிடைத்ததில் சந்தோஷப்படுகிறாராம்.
*ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த ஷ்ரத்தா கபூர், திடீரென கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இனி அப்படித்தான் நடிப்பாராம்.
*‘பாஜிராவோ மஸ்தானி’ சரித்திரப் படத்தில் ஜெய்ப்பூர் ராணியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.
*திருமணத்துக்குப் பிறகு பாடுவதைக் குறைத்து வருகிறார் ஷ்ரேயா கோஷல். இதனால் பாலிவுட் இசையமைப்பாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
*‘தாரே ஜமீன் பர்’ பட இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆலோசித்து வருகிறார் ஆமிர்கான்.

-ஜியா