வாய்ஸ் கொடுக்கும் ரஜினி வாய்மூடி இருப்பது ஏன்?



ராவாரம் ஆரவாரமான வெற்றி என்று ‘லிங்கா’வுக்கு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், அந்தப்படத்தை வாங்கி, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், ‘பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போகிறோம்’ என்று தெருவில் நின்று குரல் கொடுக்கிறார்கள்.

இந்தப்போராட்டத்துக்கு முதல்குரலாக இருக்கும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலனிடம் பேசினோம்.‘‘ரஜினியின் முந்தைய படங்களுக்கு கொடுத்ததைப்போல் இந்தப்படத்துக்கு விளம்பரம் செய்யவில்லை.

அதனால் தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை. ஒட்டுமொத்தமாக எங்களுக்கு 33 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் கவனத்தை ஈர்ப்பதற்காக அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். பத்து சதவீத இழப்பீட்டைத் தருகிறோம் என்று அவர் சார்பாக திருப்பூர் சுப்ரமணியம் பேசுகிறார். அந்தத் தொகை போதுமானதாக இருக்காது. நாங்கள் 20 சதவீதமாவது எதிர்பார்க்கிறோம். சிறிய விநியோகஸ்தர்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

நியாயமான தீர்வு கிடைக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும். எல்லா விஷயத்துக்கும் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, அவர் சார்ந்த பிரச்னைக்கு வாய்மூடி இருப்பது ஏன்?’’ என்கிறார் சிங்காரவேலன். ‘‘தமிழகத்தில் சில விநியோகஸ்தர்கள் மட்டும்தான் பிரச்னை செய்கிறார்கள்.

 எங்களுக்கு மூன்று மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்று சொல்வதில் உண்மை இல்லை’’ என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.திரையுலக அமைப்புகள் தலையிட்டு இதற்கு தீர்வு காண்பதுதான் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

நெல்பா