ஸ்ருதி வழி தனி வழி



தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சுமார் இரண்டு டஜன் படங்களைத் தொட்டிருக்கும் ஸ்ருதிஹாசன் இதுவரை தான் நடிக்கும் படங்களைப் பற்றிய கதையை தன்னுடைய அப்பா கமலிடமோ, அம்மா சரிகாவிடமோ பகிர்ந்து  கொண்டதில்லையாம்.

அவர்களும் ஸ்ருதி பட விஷயத்தில் தலையிடமாட்டார்களாம். என் வழி தனி வழி என்பது போல் எல்லா முடிவுகளையும் ஸ்ருதி சுயமாகத்தான் முடிவு செய்கிறாராம். கட்ஸ் லேடி!