வெட்டி ஆபீசர்களின் கதை!



சேட்டை படத்திற்குப் பிறகு விமல், சூரி சேட்டையை படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.கண்ணன். படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொண்டிருக்கும் ப்ரியா ஆனந்தை கண்ணன் கிளாமராக நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் காதில் விழ... அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆவல். கண்ணனுக்கு போனைப் போட்டால், "அண்ணே...

கொடைக்கானல்ல இருக்கோம் வர்றீங்களா?" என்றார். ப்ரியா ஆனந்தை கிளாமரா பார்க்குறதுக்கு இமயமலைக்கே போவோம். கொடைக்கானல்லாம் ஒரு மேட்டரா என்று ஸ்வெட்டரை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினோம். கொடைக்கானல்லேருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மன்னவனூர் என்ற மலை கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

சொர்க்கம், சொர்க்கமுன்னு ஏதோ சொல்றாங்களே அது அந்த ஊர்தாங்க. நான்கு புறமும் மலை. நடுவில் ஒரு ஊர். அதன் ஓரமாக சின்ன ஆறு. இயற்கை எப்படிப்பட்ட பேரழகை அந்த மக்களுக்கு கொடுத்திருக்கிறது. "ப்ரியா ஆனந்த் அழகை பார்க்க வந்துட்டு இயற்கை அழகை ரசிக்கிறாப்புல இருக்கு" என்ற குரல் கேட்டுத் திரும்பினோம்.

கண்ணன் நின்று கொண்டிருந்தார். ஒரு பாட்டுக்காக இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க என்றால், சிரிக்கிறார். "ப்ரியா ஆனந்த் கிளாமரைப் பார்க்க நீங்க இவ்ளோ தூரம் வரும்போது ஒரு பாட்டுக்காக நாங்க வரக்கூடாதா.

சும்மா குளு மணாலி, சுவிட்சர்லாந்து போறதை விட இது ரொம்ப சிம்பிள். நம்ம ஊர், நம்ம அழகு. உலகத்துல உள்ள எல்லா இயற்கை வடிவங்களோட மினியேச்சர் தமிழ்நாட்டுல இருக்குறதுதாண்ணே நம்ம மண்ணோட சிறப்பு" என்றவர் "அண்ணே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஷாட்டை முடிச்சிட்டு வந்துடுறேன்" என்று கிளம்பினார்.

பிருந்தா மாஸ்டர் ப்ரியா ஆனந்துக்கு வெள்ளை உடை உடுத்தி தேவதையாக மாற்றி இருந்தார். அந்த உடை முக்கால்வாசி கிழிந்து (மாடல்தான்) அவரது கால் அழகை வெளிக்காட்ட, இடுப்புக்கும் மார்புக்கும் இடைப்பட்ட பகுதிகள் வானம்போல பரந்து விரிந்து கிடக்க, அந்தக் குளிரிலும் வியர்க்கத்தான் செய்கிறது.

தூரத்திலிருந்த ஒரு குடிலுக்குள் இருந்து விமல் குளிருக்கு ஏற்ற மாதிரி ஸ்வெட்டர் அணிந்து வந்தார். இருவரையும் பல போஸ்களில் ஆட வைத்து படம்பிடித்தார் பிருந்தா மாஸ்டர். அதனை மானிட்டரில் பார்த்து  ஓகே சொல்லிக் கொண்டிருந்தார் கண்ணன்.

"மழைக்காத்தா நீ என்னை கவுக்க..." என்ற பாடல் ஒலிக்க, அதற்கு ஏற்ற மாதிரி ஆடியது விமலும், ப்ரியா ஆனந்தும் இல்லை, இயற்கையான மழை. எங்கிருந்து தான் வந்ததோ அப்படி ஒரு மழை; அதுவும் ஐஸ்கட்டி மழை. வானிலிருந்து யாரோ கல்லால் எறிவது போன்ற ஒரு மாயை. எல்லோரும் விழுந்தடித்து அருகில் உள்ள ஒரே ஒரு  தற்காலிக டென்டுக்குள் முடங்கினார்கள்.

காற்று டென்டையே தூக்கிக் கொண்டு போகிற மாதிரி அடித்தது. மழையோ கொட்டியது. "கிருஷ்ணா காப்பாத்து கிருஷ்ணா"ன்னு அருகில் இருந்து ஒரு குரல். எட்டிப் பார்த்தால், பிருந்தா மாஸ்டர் ப்ரியா ஆனந்தை கோழிக் குஞ்சு மாதிரி அணைத்து பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு மணிநேரத்துக்குப் பிறகு எல்லாம் முடிந்து வானம் அமைதியானபோது அடுத்த ஷாட் எடுக்க எல்லோரும் தயாரானார்கள். அதற்குள் ஓடிவந்த கேமராமேன் பி.ஜி. முத்தையா, "கேமராவுக்குள் தண்ணி புகுந்துடுச்சு. மீதியை நாளைக்கு எடுத்துக்கலாமே" என்றார். உடனே பேக்அப் சொன்னார் இயக்குனர். வந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க, நம்மோடு டென்டுக்குள் அமர்ந்திருந்தார் கண்ணன். படம் பற்றிக் கேட்டோம்.

"இது காமெடி சீசன். என் பாணியிலான ஒரு ரொமான்டிக் காமெடி படம். விமலும், சூரியும் ஊரில் வெட்டி ஆபீசர்கள். வீட்டுல காசை எடுத்துக்கிட்டு எங்கிட்டாச்சும் திரியுறவங்க. அப்படி ஒரு நாள் தூத்துக்குடியிலேருந்து சென்னை வர்ற ரெயில்ல வர்றாங்க. டிரெய்ன்ல ப்ரியா ஆனந்தை சந்திக்கிறாங்க. வெட்டி ஆபீசர்களுக்கு ஒரு பெரிய வேலை வருது. அது அவுங்க வாழ்க்கையையே புரட்டிப் போடுது. ஒரு வகையில இது டிராவல் கதைதான்.

அதுல டி.இமானின் இசை, இனியாவின் குத்தாட் டம், விமல், சூரியின் காமெடி, ப்ரியா ஆனந்தின் ரொமான்ஸ் என வெரைட்டியாக இந்த காமெடி விருந்தை வைக்கிறோம். இரண்டரை மணிநேரம் ரெண்டு ராஜாக் களோடும் ஜாலியா இருந்துட்டு போக லாம்." பேசிக் கொண்டிருக்கும்போதே உதவியாளர் வந்தார். "சார் நாமதான் கடைசி. போகலாமா" என்றார். கிளம்பினோம், அந்த இயற்கை அன்னை யின் இடத்தை விட்டு...

-மீரான்