மொட்டைத்தலை துளசி!



அழகை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிப்பவர் கார்த்திகா. ஆனால், அவரது தங்கை துளசி, கேரக்டரை எப்படி மெருகேற்றுவது என்பதில் அக்கறை காட்டுகிறார். ‘கடல்’ படத்துக்காக 12 கிலோ எடையைக் குறைத்தார்.

கலைராணியின் நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்தார். ‘கேரக்டருக்காக மொட்டையடித்து நடிக்கவும் தயார்’ என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார். பாலா மாதிரி இயக்குனர்கள் மனது வைத்தால், மொட்டைத்தலை துளசியைப் பார்க்கலாம்.