பெண்ணுரிமை பேசும் படம்!



ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் உமாஸ்ரீக்கு ‘ராஜி’ படத்தின் மூலம் யோகம் அடித்திருக்கிறது. முழுக்க முழுக்க ஹீரோயினை மையமாக வைத்து கதை எழுதியிருக்கிறார் படத்தின் இயக்குனர் அசோக்.ஜிகுறும்படங்களில் நடித்துள்ள ராஜ்கமல் இதன் நாயகன்.

ஆணாதிக்கம் அதிகமுள்ள சமுதாயத்தில் எல்லா பெருமையும், மரியாதையும், வரவேற்பும், மரபுகளும் ஆண்களை மையப்படுத்தியே உள்ளன. சில குறிப்பிட்ட உரிமைகள் ஆண்களுக்கு மட்டுமே உள்ளன. அந்த உரிமைகள் ஏன் பெண்களுக்கு இல்லை என்று கேட்பது தான் படம். இந்தப் படத்தில் ராஜாத்தி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் உமாஸ்ரீக்கு விருது கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறது படக்குழு.

 -ரா