டாப்சியின் டெக்னிக்!



டாப்சியின் கைவசம்  ‘கங்கா’, ‘வை ராஜா வை’ படங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால், இதற்குமுன் தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹீரோக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி, அடுத்த படத்தில் தன்னை நடிக்க வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துவருகிறாராம். ஆனால், புதிது புதிதாக மலையாள நடிகைகள் இறக்குமதி ஆவதால், அனைத்து ஹீரோக்களின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. பாவம் டாப்சி!

‘தெலுங்கில் ஒரு படத்தில் குத்தாட்டம் போட ரெடியாகி விட்டார்’ என்று பரவிய தகவலை அறிந்து, வாலில் தீப்பிடித்த குரங்குபோல பதறிவிட்டாராம்  காஜல் அகர்வால். ‘என் வளர்ச்சியை தடுக்க சதி பண்றாங்க. ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கும் நான், கோடி ரூபாய் கொட்டித் தந்தாலும் குத்துப்பாட்டுக்கு ஆட மாட்டேன்’ என்கிறார்.

மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் ‘த்ரிஷ்யம்’ படம் ஹிட்டாகி இருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் மீனா. தொடர்ந்து அந்த மொழிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறாராம். தமிழில் இப்போதுள்ள இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைப்பதால், அம்மணி அப்செட் ஆகிவிட்டாராம்.

- தேவா