லிப்லாக் ரிசல்ட்



விஷ்ணுவர்தன் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘யட்சன்’ என பெயரிட்டுள்ளார். அவரது தம்பி கிருஷ்ணாவுடன் ஆர்யா நடிக்கிறார். கவுதம் மேனன் இயக்கும் படத்துக்காக அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தாலும் ஹேர் ஸ்டைலை மிலிட்டரி கட்டிங்காக மாற்றியுள்ளார் அஜீத்.சுனேனா - விஜய் சேதுபதி இணையும் படம் ‘வன்மம்’. புதியவர் ஜெய் கிருஷ்ணா இயக்கும் படமிது.

ஒன்றரை வருடங்களாக ‘ஐ’ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த ஷங்கர், இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார். தினமும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மாலைக்குள் முடித்துவிட்டு, அதன்பிறகு குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பட இசை விழாவுக்கு டோலிவுட் ஸ்டார் டைரக்டர் ராஜ மவுலி வந்திருந்தார். பிசியான நேரத்திலும் ‘நான் ஈ’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்த சந்தானத்தின் நட்புக்காகவே அவர் விழாவுக்கு வந்தாராம். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த லட்சுமி மேனனை தோழிகள் பாராட்டுகிறார்கள், உறவினர்கள் முகம் சுளிக்கிறார்களாம்.

-ஜியா