கவர்ச்சி ராய்





ஆயிரம் தான் சொல்லுங்கள். கொஞ்சம் அப்படி இப்படியான கேரக்டர், கவர்ச்சியில் பல எல்லைகளை கடக்க வேண்டும், பாடல்களில் உடை அணிந்திருப்பதே தெரியக் கூடாது... என்றெல்லாம் கற்பனையில் சிறகடித்துப் பறக்கும் இயக்குநர்களுக்கு லட்சுமி ராயே சர்வ வல்லவை பொருந்திய லட்சுமி கடாக்ஷத்தை வாரி வழங்குபவராக இருக்கிறார்.

எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் மறுப்பு சொல்லாத அவரே, இப்போது பாலகிருஷ்ணாவுக்கு வாழ்வு தருபவராக இருக்கிறார். கிட்டத்தட்ட தாத்தாவாகி விட்ட பாலகிருஷ்ணா, மூன்று வேடங்களில் நடிக்கும் தெலுங்குப் படம், ‘அதிநாயக்குடு’. ஓவர் நைட்டில் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. காரணம், ஒன் அண்ட் ஒன்லி லட்சுமி ராய். படத்தில் உரித்த கோழியாக காட்சியளித்திருக்கிறாராம். அதற்கு சாம்பிள் ஆக சமீபத்தில் சில புகைப்படங் களை வெளியிட்டிருக்கிறார்கள். அனைத்தும் செம ஹாட் மச்சி. ‘இந்த க்ளாமர் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா’ என்று கேட்டிருக்கிறார். போதாதா? இதுநாள் வரையில் ‘அதிநாயக்குடு’வை வாங்க விருப்பப்படாத விநியோகஸ்தர்கள் அனைவரும் இப்போது பை நிறைய பணத்துடன் தயாரிப்பாளரை முற்றுகையிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
எல்லாம் கவர்ச்சி ராயின் மகிமை!