சிரஞ்சீவி படத்தில் சல்மான்கான்?



மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’. பிருத்விராஜே இயக்கி இருந்தார். இந்தப் படத்தை தெலுங்கில் எடுக்கும் உரிமையை சிரஞ்சீவி பெற்று அவரே மோகன்லால் வேடத்திலும் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘ஆச்சார்யா’. ‘சாஹோ’ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால்.

மலையாளப் படத்தில் அமர்க்களமான அதிரடி வேடத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். வெகு சில காட்சிகளே பிருத்விராஜ் நடித்திருந்தாலும் ஆக்‌ஷனில் அபாரமாக அசத்தி இருந்தார். தெலுங்கில் அதே வேடத்தில் நடிக்க சல்மான்கானை சிரஞ்சீவி தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்.சல்மானின் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறது படக்குழு.

- யுகி