சிக்கன் மஷ்ரூம் பை



வொய்ட் சாஸ் செய்ய தேவையான பொருட்கள்: வெண்ணெய் - 50 கிராம், மைதா - 2 டேபிள் ஸ்பூன்,  பால் - 1½ கப், சிக்கன் ஸ்டாக் (Knoor Chicken Stock cubes) - 3/4 கப், வொய்ட் பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்.பில்லிங் செய்ய தேவையான பொருட்கள்: ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்,  சிக்கன் (வேக வைத்து எலும்பில்லாதது - 1/2 கிலோ (சின்ன, சின்னதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்), பூண்டு - 4 பல் (நறுக்கியது), காளான் - 250 கிராம் (இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்), பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்),

மல்லித்தழை - 1 கைப்பிடி, சில்லி பிளேக் (Chilli flakes) - 1 டீஸ்பூன், (வரமிளகாயை மிக்ஸியில் அடித்தால் ரெடி), உப்பு - தேவைக்கு, பெப்பர் தூள் - தேவைக்கேற்ப, துருவிய சீஸ் - 100 கிராம், முட்டை - 1 (அடித்து வைத்துக் கொள்ளவும்), பேஸ்டரி - இதன் செய்முறை மற்றும் அளவு ஆப்பிள் டார்ட் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வொய்ட் சாஸ் செய்முறை : ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு அதில் மைதாவை சேர்த்து கட்டியில்லாமல் கிளறிய பிறகு அதில் பால், சிக்கன் ஸ்டாக், உப்பு சேர்த்து நன்கு திக்காகும் வரை கிளறி கடைசியில் வொய்ட் பெப்பர் தூவி இறக்கவும்.

பில்லிங் செய்முறை: ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி  பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் காளான், உப்பு, மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பிறகு வேக வைத்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறி பின் அதில் வொய்ட் சாஸ் ஊற்றி கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சிக்கன் மஷ்ரூம் பை செய்முறை: பேஸ்டரியை சப்பாத்தி மாவு போல் தேய்த்து டார்ட் செய்யும் டிரேவில் போட்டு பில்லிங்கை உள்ளே வைத்து அதன்மேல் துருவிய சீஸை போட்டு, அதற்குமேல் மீதி உள்ள பேஸ்டரி மாவை சப்பாத்தி போல் தேய்த்து போர்த்தி, அதன்மேல் முட்டையை பிரஷ் கொண்டு தடவி பின் அதை பிரீ - ஹீட் செய்யப்பட்ட oven-யில் 150 டிகிரியில் 20-25 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.