பாக்ஸ்டி



தேவையான பொருட்கள்

மைதா - 2 கப், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப், வேக வைக்காத உருளைக்கிழங்கு துருவியது - 1/2 கப், பால் (அல்லது) மோர் - 1 கப் (தேவையெனில் அதிகரித்துக் கொள்ளலாம்) வெண்ணெய் - தேசைக்கல்லில் பாக்ஸ்டி செய்ய தேவையான அளவு.

செய்முறை

ஒரு சின்ன பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் போட்டு கலந்து வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில்  மசித்த உருளைக்கிழங்கு, துருவிய உருளைக்கிழங்கு, மைதா, கலவை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதில் பால் ஊற்றி கலக்கவும்.

இட்லி மாவு பதத்தைவிட திக்காக இருக்க வேண்டும். பின் இதை சூடான தோசைக்கல்லில் வெண்ணெய் போட்டு ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து சூடாக பரிமாறவும். இந்த உணவு ஐரிஷ் மக்களின் காலை உணவு. காரணம் உருளை அதிகம் விளையும் நாடு அயர்லாந்து.