பாம்பே அல்வா



தேவையான பொருட்கள்

கார்ன் ஃப்ளவர் மாவு - 1 கப், தண்ணீர் - 2 கப், சர்க்கரை - 1 கப், நெய் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்ச் நிற கலர் - 1 சிட்டிகை

செய்முறை

கார்ன் ஃப்ளவர் மாவைத் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். இந்தக் கரைசலை ஒரு கனமான பாத்திரத்தில் விட்டுக் கட்டியில்லாமல்,
கைவிடாமல் கிளறவும். வெந்து கெட்டியானபின், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து மாவுடன் கலந்தபின், எலுமிச்சை சாறு மற்றும் கலர் பவுடர் சேர்த்து நெய் சேர்த்து விடாமல் கிளறவும். நெய் பிரிந்து வந்தவுடன், நெய் தடவிய தட்டியில் கொட்டி துண்டு துண்டாக்கிப் பரிமாறவும்.