ஜாங்கிரி



தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு  - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு, ஆரஞ்சு கலர் - சிறிதளவு, சர்க்கரை - 4 கப், தண்ணீர் - 2 கப்.

செய்முறை

சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, பிசுக்கு பதம் வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். உளுத்தம்பருப்பை சில மணி நேரம் ஊற வைத்து, சிறிதளவு தண்ணீர்கூட இல்லாமல் கெட்டியாக அரைக்கவும். கலர் சேர்த்தபின், அடுப்பில் எண்ணெய் காய வைத்து, அரைத்து வைத்துள்ள ஜாங்கிரி மாவை ஜாங்கிரி செய்யும் துணியில் போட்டு நேரடியாக எண்ணெயின் மேல் பிழியவும். இருபக்கமும் பொரித்தபின், சூடான ஜாங்கிரியை சூடான சர்க்கரைப்பாகில் போட்டு, நன்றாக ஊறியபின் வெளியே எடுத்து வைக்கவும். ஜிலேபி, ஜாங்கிரி பிழியும் துணி கடைகளில் கிடைக்கும்.