தட்டைதேவையான பொருட்கள்

பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப், கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு, வெண்ணெய் - 50 கிராம், வறுத்த உளுத்தம் மாவு - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை

தண்ணீரில் பருப்புகளை அரைமணி நேரம் ஊற வைக்கவும். அரிசி மாவு, உளுத்தம் மாவை சேர்த்து சலித்து எடுத்துக்கொண்டு, வெண்ணெயை நீராக மாவில் கலக்கவும். விரல்களால் பிசறி விடவும். தண்ணீரை ஒட்ட வழித்து பருப்புகளை இதில் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மாவாக பிசைந்துகொள்ளவும்.

எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை எடுத்து உருட்டி பாலிதீன் ஷீட்டில் மெல்லிய தட்டையாக ஒவ்வொன்றாக அழுத்தி எடுக்கவும்/தட்டவும். வட்ட வடிவ தட்டை ரெடி. எல்லா மாவையும் இப்படி ரெடி செய்துகொண்டு வாணலியில் சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.