முந்திரி தேன்குழல்



தேவையான பொருட்கள்

பதப்படுத்திய அரிசி மாவு -  1 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு, முந்திரி பருப்பு - 100 கிராம், நெய் - சிறிது.

செய்முறை

முந்திரி பருப்ைப ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். அரிசி மாவை சலித்துக்கொள்ளவும். மாவில் உப்பு, உருக்கிய நெய், அைரத்த முந்திரி விழுது சேர்த்து சிறிது நீர் தெளித்து கெட்டி மாவாக பிசைந்துகொள்ளவும். முறுக்கு/தேன்குழல் அச்சில் 3 கண் உடைய அச்சு போட்டு எண்ணெய் உட்புறம் தடவி பிசைந்த மாவை நிரப்பிக்கொள்ளவும்.

ஈரத்துணியின் மீது முறுக்குகளை பிழிந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிழிந்த முறுக்குகளை எண்ணெய் கொள்ளும் அளவு போட்டு பொரித்துக் கொள்ளவும். வடிகட்டியில் பொரித்த முறுக்கை போட்டு எடுத்த பிறகு காற்று புகாத டப்பாவில் வைத்து தேவைப்படும்போது பரிமாறவும்.