ருசிகரமான பண்டிகைகள்



ஆடி  மாதம் பிறந்தாலே வரிசையாக பண்டிகைகள் களைக்கட்டும். ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி கார்த்திகை, ஆடி அமாவாசை, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, ஆவணி அவிட்டம், வரலட்சுமி நோன்பு... என சொல்லிக்கொண்டே போகலாம். பலகாரங்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் மாறுபடும் என்கிறார் சுதா செல்வகுமார்.

இவர் சென்னை காரப்பாக்கத்தில் ‘SS Art and Craft’ என்ற ெபயரில் கைவினைப் பொருட்கள் மற்றும் சமையல் பயிற்சி அளித்து வருகிறார். சமையல் இவருக்கு பிடித்தமானது என்பதால், அதில் எல்லா வகை உணவுகளை செய்வதில் இவர் கைதேர்ந்தவர். இவரின் ஸ்பெஷல் ‘குக் ஆர்ட்’. அதாவது சமையல் செய்ததை அழகாக அலங்கரிப்பதில் இவர் எக்ஸ்பர்ட். பலவித சமையல் போட்டியில் பங்குபெற்றவர் இப்போது அதே போட்டிகளுக்கு நடுவராக சென்று வருகிறார்.

அதையும் ஆர்வத்துடன் தனித்தன்மையுடன் செய்து வந்தால், இலக்கை அடையலாம் என்று கூறும் சுதா இந்த இதழில் தோழியருக்காக 30 வகையான பண்டிகை உணவுகளை வழங்கியுள்ளார். தோழிகளே நீங்களும் சமைத்து ருசியுங்கள்.

தொகுப்பு: ப்ரியா
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்