காடை கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்
பிய்த்த பரோட்டா -2, பிய்த்த காடை - ேதவையான அளவு, தக்காளி -1, வெங்காயம் -1, எண்ணெய் - தேவையான அளவு, முட்டை -1, கறிவேப்பிலை - சிறிதளவு, காடை சால்னா, உப்பு - தேவைக்கு.
செய்முறை
சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பிய்த்த பரோட்டா, உப்பு, முட்டை, பிய்த்த காடையை சேர்த்து கிண்டவும். அதன்பின் காடை சால்னாவை சேர்த்து பிரட்டினால் சூடான காடை கொத்து பரோட்டா ரெடி. குறிப்பு: பிய்த்த காடையை வெட்டிச் சேர்த்து தனியாக தயார் செய்துகொள்ளவும்.
|