மஞ்சள் பூசணி தயிர்ப் பச்சடி



தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணித்துண்டுகள் - 1 கப், தயிர் - 1/2 கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு - தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் - 1.

செய்முறை

மஞ்சள் பூசணித்துண்டுகளை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேக வைத்த பூசணித்துண்டுகள், அரைத்த விழுது, உப்பு, தேவையானத் தண்ணீர் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். ஆறிய பிறகு தயிர் சேர்த்துப் பரிமாறவும். இளமஞ்சள் நிறத்தில் தயிரின் சுவையுடன் பச்சடி தயார்.