மண மணக்கும் பச்சடிகள்!பிரியாணி என்றால் தயிர் பச்சடி, சாம்பார் சாதத்திற்கு காராபூந்தி தயிர் பச்சடி... மோர்குழம்பிற்கு வெண்டைக்காய் புளி பச்சடி... இது போல் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு வித பச்சடிகளின் காம்பினேஷன் உள்ளது. எந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் அதனை பச்சடியாக மாற்றி செய்யலாம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வளர்மதி.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் விருந்து என்றாலே அதில் பல வகையான பச்சடிகள் இடம் பெறும். இங்கு பச்சடிகளுக்குதான் முக்கியத்துவம் தருவார்கள். பச்சடிகள் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் பெரும்பாலும் தயிர் அல்லது வெல்லம் சார்ந்து வருவதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தொடர்ந்து 35 ஆண்டுகளாக வானொலி, தொலைக்காட்சி, ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு விமர்சனம் எழுதி வருகிறேன். அதுமட்டும் இல்லாமல் சமையல் மேலும் அதிக ஆர்வமுண்டு. அந்த ஆர்வத்தில் நாேன புதிதாக ஏதாவது ஒரு உணவினை சமைத்து பார்ப்பதுண்டு.

அதன் அடிப்படையில் தோழியர் உங்களுக்காக இந்த இணைப்பில் 30 வகை பச்சடிகளின் செய்முறையினை அறிமுகம் செய்திருக்கிறேன். நீங்களும் வீட்டில் சமைத்து ருசித்து மகிழுங்கள்.

தொகுப்பு: ப்ரியா
படங்கள்: மணிகண்டன்