ஃப்ரைடு ஷாலட்தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 250 கிராம்    
நெய் - 1 மேஜைக்கரண்டி    
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.

செய்முறை

சின்ன வெங்காயத்தைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய்யைச் சேர்த்து சூடானதும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, மிளகுத்தூளை சேர்த்து வதக்கி இறக்கவும். சுவையான ஃப்ரைடு சாலட் தயார்.

குறிப்பு : எண்ணெயில் வதக்கிய சின்ன வெங்காயத்துடன் பனங்கற்கண்டைச் சேர்த்தும் சாப்பிடலாம்.  வாரம் 2 முறை சாப்பிடுவது மிகவும் நல்லது.