ஸ்ட்ராபெர்ரி சிக்கூ ஜூஸ்தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி - 100 கிராம்    
சப்போட்டா பழம் - 3 (பழுத்தது)    
தேன் - 2 டீஸ்பூன்    
பால் - 200 மி.லி.    
ஆப்பிள் - 1.

செய்முறை

ஸ்ட்ராபெர்ரி, சப்போட்டா, ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை காய்ச்சி குளிர வைத்துள்ள பாலுடன் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். இதனை ஃபிரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம்.

குறிப்பு: நெல்லி, சாத்துக்குடி, ஆரஞ்சுப்பழம், தக்காளி, குடைமிளகாய், கீரை வகைகள், கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் புரொக்கோலியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தேனுக்குப் பதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.