மனதை உற்சாகமாக்கும் சாய்!



ஒரு டீ குடிச்ச அடுத்த நிமிடம் நம் மனம் உற்சாக துள்ளல் போடும். இந்த இதழில் தோழியர்களுக்காக 30 வகையான இன்ஸ்டன்ட் டீ மற்றும் இதர பானங்களை அறிமுகம் செய்துள்ளார் Dawn Tea - Signature Cafe உரிமையாளர் முசுதூர் ரஹிமான். ‘‘1970-ம் ஆண்டு என் தந்தையால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. எங்களின் பிரதானம் டீ என்பதால் ஆரம்பத்தில டீ பவுடர்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். பிறகு படிப்படியாக 2001ம் ஆண்டு  எங்களின் டீ... Dawn Teaயாக புதிய பரிணாமம் பெற்றது.

இதன் மூலமாக எங்களுடைய உற்பத்தியை பல்வேறு வகையில் மாற்றி அமைத்தோம். டீ, காபி பவுடர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு பானங்களையும் அறிமுகம் செய்தோம். சாதாரண டீ, காபி மட்டும் இல்லாமல் லெமன் ஜிஞ்சர் டீ, கிரீன் டீ, இன்ஸ்டன்ட் டீ, பாதாம் பால், சூப் மற்றும் காபி வகைகளை அறிமுகப்படுத்தினோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க 2019ல் ‘Signature Cafe’ என்ற பெயரில் காபி ஷாப் ஒன்றை துவங்கியுள்ேளாம். இதழில் உள்ள  பலவிதமான டீ, காபி மற்றும் இதர பானங்களை சுவைத்து மகிழுங்கள்.’’

தொகுப்பு: ப்ரியா மோகன்