கருணைக் கிழங்கு துவையல்தேவையான பொருட்கள்

தோல் சீவிய, அரிந்த கருணைக் கிழங்கு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி  - சிறிதளவு, கடலை பருப்பு - 50 கிராம், உ. பருப்பு- 50 கிராம், இஞ்சி - சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை

தோல் சீவிய, அரிந்த கருணைக் கிழங்கை, உப்பு, புளி சேர்த்து வேக விட்டு வடிய விடவும். பின்பு வாணலியில் காய்ந்த மிளகாய், க. பருப்பு, உ. பருப்பு, பெருங்காயம், இஞ்சி இவற்றை நன்கு வறுத்து, வேகவைத்த கருணை கிழங்குடன் உப்பு, புளி சேர்த்து அரைத்தால் சுவையான கருணைக் கிழங்கு துவையல் ரெடி. புளி கொஞ்சம் கூடுதலாய் வைத்து அரைத்தால் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.