பாரம்பரியமும் ஆரோக்கியமும்!20 வருடமாக சொந்தமாக டெக்ஸ் டைல்ஸ் மற்றும் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார் வேலூரை சேர்ந்த மீனாட்சி. மகள்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார்கள். தொழிலை பார்த்துக் கொண்ட நேரம் போக அதிக நேரம் இருந்ததால் சமையல் பக்கம் இவரின் கவனம் திரும்பியது.
ஏற்கனவே சமையல் ஆர்வம் கொண்டவர் என்பதால், சமையல் டிப்ஸ் மற்றும் துணுக்குகளை பத்திரிகைக்கு எழுதி வந்துள்ளார். இவரின் துணுக்குகள் பிரசுரமாக சமையல் மேல் இருந்த இவரின் ஆர்வம் அதிகரித்தது.

அதன் வெளிப்பாடுதான் இந்த இதழில் இவரின் 30 வகை துவையல்கள். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளிய முறையில் இந்த துவையல்களை செய்யலாம். பாரம்பரியமானது... ஆரோக்கியமானது.

குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடலாம். ஒவ்வொரு துவையலும் ஒரு மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பதால் வாரம் ஒரு துவையல் கட்டாயம் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். சூடான சாதத்தில் அல்லது சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் ஏற்ற சைட்டிஷ்.   

தொகுப்பு: ப்ரியா

படங்கள்:  வே.ஸ்ரீதர்