மட்டன் பெப்பர் ஃப்ரை



தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ,
எண்ணெய் - 200 மி.லி.,
பூண்டு (விழுது) - 25 கிராம்,
இஞ்சி (விழுது) - 25 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
மிளகு அரைத்தது - 20 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - 10 கிராம்,
கொத்தமல்லி - தேவையான அளவு.
உப்பு - தேவைக்கு.

செய்முறை  

முதலில் மட்டனை வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். உடன் இஞ்சி, பூண்டு விழுதுகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மட்டன் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். பிறகு மிளகுப்பொடியை மேலே தூவி வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.