ராகி-தினை இனிப்பு சீடை
தேவையான பொருட்கள்

ராகி மாவு - 1/4 கிலோ, தினை மாவு - 1/4 கிலோ, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய் பொடி - 1½ டீஸ்பூன், சுக்கு - 1½ டீஸ்பூன்,  வறுத்த உளுந்த மாவு - 50 கிராம், எள்ளு (வெள்ளை) - 15 கிராம், தேங்காய் பூ - 1 கப், கடலை எண்ணெய் - 1/4 கிலோ  (பொரிப்பதற்கு).

செய்முறை

வெல்லத்தில் 100 மி.லி. தண்ணீர் சேர்த்து காய்த்து, கம்பி பதம் வரும்போது வடிகட்டி இறக்கி வைக்கவும். மீதமுள்ள பொருட்கள்  அனைத்தையும் தேவையான அளவு வெல்லப்பாகு சேர்த்து பிசைந்து பின் அதனுடன் சிறிது உளுத்தம் மாவு சேர்த்து  திடமாய்  வந்தவுடன் அதனை உருண்டை பிடித்து கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.