காய்கறி கப் கேக்



தேவையான பொருட்கள்

கேரட் : 1 துறுவியது,கான்: 1 கைப்பிடி(Sweet corn),குடை மிளகாய்: 1/4 கப், முட்டை கோஸ்: 1/4 கப்,பட்டாணி: 1 கைப்பிடி,கோதுமை மாவு: 125 கிராம்,உப்பு:1/4 டீஸ்பூன்,பேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன்,பால்: 100 மில்லி,தயிர்: 1 டேபிள் ஸ்பூன்,ஆயில் : 50 மில்லி,சீஸ் துறுவியது: 1 கப்,மிளகுதூள்: 1/2 டீஸ்பூன்,முட்டை: 1 பெரியது.குறிப்பு: அனைத்து காய்கறிகளையும் ஒரு வெள்ளை துணியில் முடிந்து தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை போடவும். பின் அதில் ஆயில், தயிர், பால், முட்டை, துருவிய சீஸ், உப்பு, மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கலக்கவும். பின் அதில் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடர் போட்டு கலக்கவும்.பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் மற்றும் மஃபின் டிரேயில் பேப்பர் கப்பை வைத்து தயார் செய்த கலவையை நிரப்பவும்.பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.