சிக்கன் உப்புக்கறி



என்னென்ன தேவை?

சிக்கன் – 1/2 கிலோ,
வெங்காயம் - 2,
நசுக்கிய பூண்டு - 5,
கிள்ளிய மிளகாய் வற்றல் - 5,
கடலெண்ணெய் – 100 மிலி,
பட்டை - சிறிது,
அன்னாசிப் பூ தேவைக்கு,
கல்பாசி - சிறிது,
சீரகம் –- 1/2 ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்,
சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றவும். பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சீரகம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து  நசுக்கிய பூண்டை போட்டு வற்றல் சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சிக்கனை போட்டு கிளறி சிறிது உப்பை  போட்டு தண்ணீர் ஊற்றி கிளறவும். நன்றாக வெந்தபின்பு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.