காரைக்குடி மீன் மசாலாஎன்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 150 கிராம்,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிது,
கடலெண்ணெய் - 100 கிராம்,
வெந்தயம் - தேவைக்கேற்ப,
சோம்பு - ேதவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் ,
கல் உப்பு - தேவைக்கேற்ப,
புளி - 1 கப்,
வஞ்சிர மீன் - 3 துண்டு.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். கடலெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த உடன் வெந்தயம், சோம்பு சேர்க்கவும்.  பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். சிவந்தவுடன் நறுக்கியத் தக்காளியை சேர்த்து  கிளறவும். நன்றாக வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் போட்டுக் கிளறவும். நன்றாகக் கொதித்தவுடன் மீன் துண்டை  அதில் போடவும். போட்டு சிறிது நேரம் வற்றிய பிறகு இறக்கி வைக்கவும். சிறிது கொத்தமல்லித் தழை போடவும்.