கீரை பாலாடை கடைந்தது



என்னென்ன தேவை?

அரைகீரை அல்லது சிறுகீரை - 2 கட்டு,
சின்ன வெங்காயம் - 10,
பச்சைமிளகாய் - 5,
சீரகம், தனியா - தலா 1/4 டீஸ்பூன்,
பாலாடை - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


ஒரு மண்சட்டியில் சுத்தம் செய்த கீரை, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி தனியா, சீரகத்தை கைகளால் தேய்த்து போட்டு, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதங்கியதும் வெந்த கீரையில் கொட்டி உப்பு, பாலாடை சேர்த்து கடைந்து பரிமாறவும்.

குறிப்பு : தண்ணீர் அதிகம் இருந்தால் கடைய முடியாது. தண்ணீரை வடித்து விட்டு கடைந்து பின் சேர்த்துக் கொள்ளலாம்.