கருவாடு வறுவல்



என்னென்ன தேவை?

நெத்திலி கருவாடு - 50 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
தக்காளி - 1, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?


கருவாட்டை சுடுதண்ணீரில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கருவாடு, குழம்பு மிளகாய் பொடி, உப்பு போட்டு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
குறிப்பு : கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.