வாத்து கிரேவி



என்னென்ன தேவை?

வாத்துக்கறி - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி - 4 டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


வாத்துக்கறியை சுத்தமாக கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். அதனுடன் அரைத்த சின்னவெங்காய விழுது, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் பொடி, உப்பு போட்டு நன்கு வதக்கவும். பின்பு வாத்துக் கறியையும் சேர்த்து சுருள வதக்கி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கவும். குக்கரை திறந்து நன்றாக கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது கிரேவியாக வரும் வரை கிளறி இறக்கவும்.