மட்டன் கல் சோறு



என்னென்ன தேவை?

எண்ணெய்- 5 தேக்கரண்டி,
வெங்காயம்-3,
முட்டை-1,
மட்டன் – 150 கிராம்,
வேகவைத்த பாசுமதி அரிசி- 150 கிராம்,
காய்ந்த மிளகாய்-5,
கொத்தமல்லி, மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி,
உப்பு சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு முட்டை, வெங்காயம், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அரிசி மற்றும் தோசைக்கல் மசாலா சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.