மட்டன் குடல் வறுவல்



என்னென்ன தேவை?

சுத்தப்படுத்தி வேகவைத்த குடல் -250 கிராம்,
சின்னவெங்காயம் - 5,
காய்ந்த மிளகாய் - 4,
பச்சை மிளகாய் - 4,
எண்ணெய் - 6 தேக்கரண்டி,
கறிவேப்பிலை, மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
உப்பு சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் வேகவைத்த குடலை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதனுடன்,  மட்டன் மசாலா, உப்பு சேர்த்து 5  நிமிடம் நன்றாக வறுத்து எடுக்கவும்.