அதிராம்பட்டினம் மார்க்கண்ட களரிஎன்னென்ன தேவை?

வேகவைத்த மட்டன் மார்க்கண்டம் - 300 கிராம், மட்டன்
மசாலா- 5 தேக்கரண்டி.

அரைக்க...

துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி,
பாதாம் -2 ,
பிஸ்தா -2 ,
முந்திரி - 2 .

தாளிக்க...

நெய்- 2 தேக்கரண்டி,
பட்டை- ½ தேக்கரண்டி,
லவங்கம்- ½ தேக்கரண்டி,
ஏலக்காய்- ½ தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
கறிவேப்பிலை, உப்பு சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்.  பின்னர் அதனுடன் மார்க்கண்டம் மற்றும்  மட்டன் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக அரைத்தவற்றை சேர்க்கவும்.