ஓட்ஸ் காரப் பணியாரம்



என்னென்ன தேவை?

ஓட்ஸ் - 1 கப்,
பச்சரிசி மாவு, உளுந்து - தலா 1/2 கப்,
ரவை - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
தயிர் - சிறிது,
கடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைக்கவும். அதனுடன் ஓட்ஸ், ரவை சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்பு அரைத்த  மாவுடன் பச்சரிசி மாவு சேர்த்து கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய்  தாளித்து மாவில் கொட்டி கலந்து தயிர் சேர்த்து 10 நிமிடம் கழித்து குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி  இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.