சோளப் பணியாரம்



என்னென்ன தேவை?

சோள மாவு, வரகரிசி மாவு - தலா 1 கப்,
கோதுமை ரவை - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1/4 கப்,
தயிர் - 1 கப்,
 உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சோள மாவு, வரகரிசி மாவு, கோதுமை ரவையுடன் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை சூடாக்கி  சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயத்தை வதக்கி மாவில் கொட்டி நன்றாக கலந்து குழிப்பணியாரச் சட்டியை  சூடாக்கி நல்லெண்ணை விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.